அஜித் ரசிகர்கள் தான் தற்போது வலிமை படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரத்தில் அதிகாலை காட்சிகள் தொடங்க இருக்கிறது. படம் முதல் காட்சி முடிந்தபிறகு தான் ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்பது தெரியவரும்.
- Advertisement -
வலிமை படத்தை கொண்டாடும் வகையில் அஜித் ரசிகர்கள் பலரும் ஊர் முழுக்க போஸ்டர், பேனர் என அமர்களப்படுத்தி இருக்கின்றனர். அதிலும் மதுரையில் அஜித் ரசிகர்கள் வித்யாசமாக ஒட்டி இருக்கும் போஸ்டர்கள் எல்லாம் இணையத்தில் படுவைரல் ஆனது.
- Advertisement -
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் வலிமை படத்தை வரவேற்று வைத்திருக்கும் பேனர் தற்போது இனியத்தில் வைரல் ஆகிறது. விஜய் – அஜித் ஆகியோரது ரசிகர்கள் இணையதளங்களில் எப்படி அடித்துக்கொள்வார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.
அதனால் விஜய் ரசிகர்கள் வைத்த பேனர் இணையத்தில் அனைவருக்கும் ஆச்சர்யம் அளித்து இருக்கிறது.