தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பூஜை கடந்த வாரம் தான் நடைபெற்றது. இதனையடுத்து தற்போது படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று முன்தினம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது தளபதி விஜய் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டார். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு பல்வேறு கேள்விகளை எழுப்ப செய்தது. ஓட்டு போட்ட உடனேயே அவர் ஜார்ஜியா கிளம்பினார்.
- Advertisement -
இந்த நிலையில் தளபதி விஜய் பயன்படுத்திய சைக்கிளின் விலை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அது மான்ட்ரா என்ற நிறுவனம் உருவாக்கிய கியர் வகையை சேர்ந்த சைக்கிள். இந்த சைக்கிளின் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 22 ஆயிரம் எனவும் தகவல் கிடைத்துள்ளது.