இலங்கையின் பிரதமர் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான, அலரி மாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் இருவர் பின்னர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தின் பின்னணி தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
- Advertisement -
கடந்த 9ஆம் திகதி போராட்டக்காரர்களால், ஜனாதிபதி மாளிகை கைப்பற்றப்பட்ட பின்னர், ஜனாதிபதி செயலகமும் அலரி மாளிகையும் ஆக்கிரமிக்கப்பட்டன.