வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 66. இப்படத்தை தில் ராஜு இயக்குகிறார்.மேலும் இப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருவதோடு இப் படத்தில் முன்னணி இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.
- Advertisement -
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்துவிட்டதாகவும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாகவும் இயக்குநர் வம்சி குறிப்பிட்டு இருந்தார்.
- Advertisement -
தளபதி 66 படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிக்க சரத்குமார் கமிட்டாகி இருப்பதாக ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தோம். ஆனால், அவர் இப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு விஜய்க்கு இரண்டாவது அண்ணனாக நடிக்க, பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் கமிட்டாகியுள்ளதாக சுவரஸ்ய தகவல் கசிந்துள்ளது.
எப்போதும் திரையில் ஹீரோ, வில்லன் என்று சண்டை போட்டு கொண்டிருந்த விஜய்யும், பிரகாஷ் ராஜும் இப்படத்தில் அண்ணன் தம்பியாக நடிக்க போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.