தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வெற்றியடைந்து வருகிறது.
- Advertisement -
அந்த வகையில் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வந்தார்.
- Advertisement -
இப்படத்தின் போஸ்டர்கள் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது, எதிர்பார்த்ததை போலவே Beast படத்தின் போஸ்டர்கள் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தளபதி விஜய் சில வருடங்களுக்கு முன்னர் ட்விட்டர் பக்கத்தில் ஆக்ட்டிவ்வாக இருந்தார், அப்போதெல்லாம் அவ்வப்போது ரசிகர்களிடம் உரையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
அந்த வகையில் கடந்த 2013-ல் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்த விஜய் “எனது ரசிகர்கள் தான் என் தலைவர்கள்” என பதிவிட்டு இருந்தார்.
இப்போது அந்த பதிவு ரசிகர்களிடம் பரவி வருகிறது.