மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தின் ஆயிலடிச்சேனை ஆற்றில் மூழ்கி, நாகராசா கரிசனன் என்ற 14 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
- Advertisement -
நேற்று வியாழக்கிழமை மாலை 2.30 மணியளவில் தோணியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, காற்றின் வேகம் காரணமாக தோணி ஆற்றின் நடுப்பகுதிக்குச் செல்ல முற்பட்டுள்ளது.இதனால் பயத்தின் காரணமாக தோணியில் இருந்த சிறுவன் ஆற்றில் பாய்ந்துள்ளார்.
- Advertisement -
இவ்வாறு ஆற்றில் பாய்ந்த சிறுவனை காப்பாற்ற அயலவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்த போதும், இறுதியில் நேற்றிரவு 11 மணியளவில் சிறுவனின் சடலத்தையே ஆற்றிலிருந்து மீட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.