எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆறுக்கு நீர் வழங்கும் கந்தலோயா ஆற்றில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக எட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
சடலமாக மீட்கப்பட்டவர், எட்டியாந்தோட்டை கந்தலோயா தோட்ட கீழ் பிரிவைச் சேர்ந்த 39 வயதுடைய சுப்பிரமணியம் நடராஜ் என்ற இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
- Advertisement -
மீட்கப்பட்டவர் கடந்த 10ம் திகதி முதல் காணாமல் போய்விட்டதாக பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் , சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.