யாழ்ப்பாணம் – புலோலி உபயகதிர்காமம் பகுதியில் குடி தண்ணீர் எடுப்பதற்கு சென்ற பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். நேற்று முற்பகல் இடம்பெற்ற இச் சம்பவத்தில் முறாவில், புலோலி தெற்கைச் சேர்ந்த 60 வயதான முருகமூர்த்தி யோகேஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார்.
- Advertisement -

வீட்டில் இருந்து குடி தண்ணீர் எடுப்பதற்காக சென்ற அவர் குடிதண்ணீர் எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் வீதியில் மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது