யாழ். மாவட்டத்தில், 2021 ஆம் ஆண்டின் இதுவரையான காலத்தில் 695 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் மார்ச் மாதத்தில் மாத்திரம், கடந்த 30 நாட்களில் 523 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -

நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.