வவுனியா மாறா இலுப்பை குளத்தில் ஏற்பட்ட நீர் கசிவு தொடர்பாக வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 56 படைப்பிரிவின் 563 பிரிகேடின் 21 வது இலங்கை சிங்க படை வீரர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது. பொதுமக்கள் அளித்த தகவலுக்கமைய விரைந்து செயற்பட்ட நடவடிக்கைகள் காரணமாக பேரிடர் தவிர்க்கப்பட்டது.
- Advertisement -

96 ஏக்கருக்கும் அதிகமான நெல் வயல்கள் மற்றும் மரக்கறி பயிர் செய்கைக்கு நீர் விநியோகம் இடம்பெறும் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து உடைப்பு நிலையினை அடைந்தமையால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக 563 பிரிகேட்டின் உதவியை நாடியிருந்தனர். தகவல் கிடைத்தவுடன், வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன படையினருக்கு அவசியமான போக்குரவத்து வசதிகள் மற்றும் மண்ணையும், நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளின் சேவையினையும் பெற்றுகொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.