நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தேவாலயங்களுக்கு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று முழுமைப்பாதுகாப்பை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சீடி விக்கிரமரட்ன இது தொடர்பான பணிப்புரையை விடுத்துள்ளார். இது தொடர்பில் தேவாலய நிர்வாகங்களுடன் இணைந்து திட்டங்களை செயற்படுத்துமாறு அவர் பணித்துள்ளார்.
இந்தநிலையில் காவல்துறைகளின் பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளும் சுற்றுநிருபங்களின் அடிப்படையில் பாதுகாப்புக்கடமைகளுக்கு அனுப்பப்படுவர் என்றும் காவல்துறை அதிபர் தெரிவித்துள்ளார். இதேவேளை, புலனாய்வு சேவையினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறை அதிபர் தெரிவித்துள்ளார்.