முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்க தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் இதனையடுத்து தனது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரட்னவிற்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “அண்மையில் சிலர் ஹொரகொல்லாவில் உள்ள தனது வீட்டிற்குள் நுழைந்து எவ்வாறு ஆய்வு செய்தார்கள் என்பதையும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
- Advertisement -

அங்கிருந்த பொருட்கள் எதையும் அகற்றாம் அப்படியே சென்றிருந்தனர். எனவே இது ஒரு கொள்ளை முயற்சியாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன என்றும், எனினும் விசாரணைகளைத் தொடர்ந்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளார். எவ்வாறாயினும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் ஒரு அசம்பாவிதச் செயலுக்கான ஒத்திகையாக இது கருதப்படலாம் என்று அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.