சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு பணி நீடிப்பை வழங்குவது குறித்து அரசாங்கத்தின் பிரதானிகள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது. சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா எதிர்வரும் மே மாதம் ஓய்வுபெறவுள்ளார். எனினும் அவரது திறமையான சேவையை கவனத்தில் கொண்டு அவருக்கு பணி நீடிப்பு வழங்கப்படவுள்ளதாக பேசப்படுகிறது.
- Advertisement -

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் சம்பந்தப்பட்டவர்களை அண்மையில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தமை இந்த பணி நீடிப்பை வழங்க பிரதான காரணியாக அமைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.