2021ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 500இற்கும் அதிகமானோர் விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டில் அதிகரிக்கும் விபத்துக் குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார். கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 13 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.
அவர்களில் 8 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு பளையில் இடம்பெற்ற கொடூர விபத்தில் இரு சிறுவர்கள் மற்றும் அவர்களது தந்தையார் உயிரிழந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.