வவுனியாவில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆசிரியரான, 33 வயதான, பரந்தாமன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் இன்றையதினம் அப்பகுதியில் உள்ள ஆலயத்தின் தேர் திருவிழாவுக்காக குளத்தில் தாமரைப்பூவினை பறிப்பதற்காக சென்றுள்ளார்.
- Advertisement -

எனினும் நீண்ட நேரமாகியும் அவரைக் காணவில்லை. இதனையடுத்து அப்பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் தேடுதல் மேற்கொண்டதுடன் சம்பவம் தொடர்பில், பொலிஸாருக்கும் தெரியப்படுத்தினர். நீண்ட நேரத்தின் பின்னர் குறித்த ஆசிரியரின் சடலம் குளத்தில் இருந்து பொதுமக்களால் மீட்கப்பட்டது. இவர் இராணுவத்தின் கடேட் படைப்பிரிவின் கப்டன் தரத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
- Advertisement -
