நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்து அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அடைவதற்கு இலங்கையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு பிரித்தானியா ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது. இந்த விடயத்தில் ஆக்கபூர்வமாக ஈடுபட பிரித்தானியா தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளிவிவகார அலுவலக இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இலங்கை, தென் சூடான், சிரியா, ஈரான், மியான்மர், பெலாரஸ் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகள் குறித்த முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றிய ஐ.நா மனித உரிமைகள் பேரவை 46வது அமர்வை முடிவுக்கு கொண்டுவந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
- Advertisement -

“இலங்கை மீதான தீர்மானத்தை வரவேற்கிறேன். இது மோதலுக்கு பிந்தைய நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. கடந்த காலத்தின் கடுமையான மனித உரிமை மீறல்கள் இலங்கையில் மீளவும் ஏற்படகூடிய அபாயம் இருப்பதாக எச்சரித்த உயர் ஸ்தானிகரின் அறிக்கைக்கும் இது பதிலளிக்கிறது, ”என்று அவர் கூறினார்.
எனவே ஐ.நா. தனது கண்காணிப்பைத் தொடர வேண்டும். அத்துடன், எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளை ஆதரிப்பதற்கான ஆதாரங்களை சேகரிக்க வேண்டும் என்பது சரியானது என தாரிக் அஹமட் மேலும் கூறியுள்ளார்.