ஃபைசர்-பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வாங்குவதற்கான அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்ததாகவும், விரைவில் ஒரு இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் என்றும் இலங்கை தெரிவித்துள்ளது. அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன இதை தெரிவித்துள்ளார். ஃபைசர் தடுப்பூசிக்கு மைனஸ் 70 டிகிரி குளிர்பதனத்துடன் சேமிப்பு வசதிகள் தேவை, இது இலங்கை அரசிடம் இல்லை.

இருப்பினும், பேராசிரியர் சன்ன ஜெயசுமனா, இந்த விவகாரம் தொடர்பில் உற்பத்தியாளருடன் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் இப்போது ஒரு தீர்வு பெறப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார். மைனஸ் 70 டிகிரி குளிர்பதனத்தை பராமரிக்கும் போதும் தடுப்பூசிகளை சேமிப்பு வசதிகளுக்கு கொண்டு செல்வதற்கான வசதிகளை வழங்கவும் நிறுவனம் தயாராக உள்ளது என்றார். ஃபைசர்-பயோஎன்டெக் விரைவில் இலங்கைக்கு தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.