நுகர்வோர் விற்பனைக்காக தற்போது சந்தையில் இருக்கும் தேங்காய் எண்ணெயின் தரத்தை ஆய்வு செய்ய நுகர்வோர் விவகார ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மூன்று மாவட்டங்களில் விற்பனைக்குள்ள தேங்காய் எண்ணெய்யின் தரத்தை ஆராயும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட தேங்காய் எண்ணெயின் மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் மற்ற மாவட்டங்களில் இருந்து தேங்காய் எண்ணெய் பெறப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்படும் என்று நுகர்வோர் விவகார ஆணையம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
மேலும் நாட்டில் விஷத்தன்மை வாய்ந்த தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு விடப்பட்டிருப்பதாகவும், இந்த தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தினால் எப்லடொக்ஸின் என்ற புற்றுநோய் ஏற்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
13 கொன்டெயினர்கள் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு விடப்பட்டிருப்பதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை மேலும் 8300 மெட்ரிக் டொன் தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விற்பனைக்காக விடப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. இதையடுத்து குறித்த ஆய்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக நுகர்வோர் விவகார ஆணையம் தெரிவித்தது.