பொகவந்தலாவ நகரில் நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் பேருந்துகளில் உள்ள மின்கலங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொகவந்தலாவ நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த நான்கு மின்கலங்கள் கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை இரவு நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகளிலேயே இந்த மின்கலங்கள் இனந்தெரியாதவர்களால் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை பேருந்தின் சாரதிகளும் நடத்துனர்களும் சேவைக்கு சென்ற போதே குறித்த நான்கு பேருந்துகளிலும் உள்ள மினகலங்கள் களவாடப்பட்டமை தொடர்பில் பேருந்தின் உரிமையாளர்கள் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்துள்ளனர்.
- Advertisement -
அவர்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பேருந்துகள் ஹட்டன் மற்றும் பொகவந்தலாவ பகுதிக்கிடையில் சேவையில் ஈடுபடுகின்ற பேருந்துகள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.