HomeUncategorizedஇந்தியா தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது! கமல் ஹாசன் வெளியிட்ட தகவல்

இந்தியா தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது! கமல் ஹாசன் வெளியிட்ட தகவல்

ஐ. நா சபையின் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா மேற்கொண்டிருந்த நிலைப்பாட்டை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கண்டித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பக்கத்தில் அவர் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார். ஐ. நா மனித உரிமைகள் பேரவையின், 46 ஆவது கூட்டத்தொடரில், ஸ்ரீலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணை, 11 மேலதிக வாக்குகளால் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.

47 உறுப்பு நாடுகளைக்கொண்ட, ஐ. நா மனித உரிமைகள் பேரவையில், பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. இதன்போது இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன.

இந்தநிலையில் இந்தியா வாக்கெடுப்பில் இருந்து விலகியமை தமிழ் மக்களுக்கு செய்த துரோக செயல் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் இந்த நிலைப்பாடு தொடர்பாக தமிழகத்திலுள்ள ஏனைய கட்சிகளின் தலைவர்களும் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments