அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் படி மாகாணசபைகள் என்பது நாட்டில் அடிப்படை சட்டமாகும். எனவே தனிப்பட்ட நபர்களின் தேவைக்காக அவற்றை இரத்து செய்ய முடியாது என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அத்தோடு தேர்தலை காலம் தாழ்த்த வேண்டிய தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்து்ளளார்.
- Advertisement -
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், மாகாணசபை தேர்தல் தொடர்பான சட்ட மூலத்தில் காணப்படுகின்ற சிக்கல் தீர்க்கப்பட்டு விரைவில் தேர்தல் நடத்தப்படும். நாட்டின் அடிப்படை சட்டத்தை மீறி செயற்பட அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை.
- Advertisement -
மாகாணசபைத் தேர்தல் கடந்த அரசாங்கத்தால் திட்டமிட்டு காலம் தாழ்த்தப்பட்டது. இது தொடர்பான சட்ட மூலத்தில் காணப்படுகின்ற சிக்கல்களே இன்றும் தேர்தல் காலம் தாமதமடைவதற்கு காரணமாகும். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி நாட்டின் அடிப்படை சட்டமாக மாகாணசபைகள் காணப்படுகின்றன.

இவற்றை மீறி செயற்பட அரசாங்கம் விரும்பவில்லை. அத்தோடு மாகாணசபைகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் தனிப்பட்ட நபர்களின் தேவைக்காக இதனை மாற்றவோ இரத்து செய்யவோ முடியாது. தேர்தல் முறைமைகள் தொடர்பில் சட்ட மூலத்தில் காணப்படுகின்ற சிக்கல்கள் நிவர்த்தி செய்யப்பட்டு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.