இந்தியா எப்போதும் இலங்கைக்கு சோதனை கொடுக்கும் நாடு என அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் ஊடக சந்திப்பு நடத்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
- Advertisement -

“அண்டைய நாடு, பெரிய அண்ணன் என்று சொல்லப்படும் இந்தியாவின் செயற்பாடு எமக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. இந்தியா எப்போதும் இலங்கைக்கு சோதனை கொடுக்கும் நாடு. இந்தியா எப்போதும் இலங்கைக்கு வாளி கவிழ்க்கும் நாடு. இலங்கைக்கு எதிரான நாடு இந்தியா. 13வது திருத்தச் சட்டத்தை எப்போதும் அருகில் வைத்துக் கொண்டுதான் இலங்கைக்கு எதிராக இந்தியா செயற்படும்.