யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் கடந்த ஒரு வாரமாக தொடர்புடையவர்களை பேணியவர்களை உடன் தொடர்புகொள்ளுமாறு சுகாதாரத் துறை கோரியுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையில் அவருடன் தொடர்புடைய பலர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், நீதிமன்றங்களில் அவருடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
- Advertisement -
இந்த நிலையிலேயே யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் கடந்த ஒரு வார காலமாக (மார்ச் 16ஆம் திகதிக்குப் பின்னர்) தொடர்புடையவர்களை பேணியவர்களை தொடர்புகொள்ளுமாறு சுகாதாரத் துறை கேட்டுள்ளது.
- Advertisement -

அவ்வாறு தொடர்புடையவர்கள் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியுடன் அல்லது சுகாதாரத் திணைக்களத்தின் 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அடையாளப்படுத்துமாறு சுகாதாரத் துறை கேட்டுள்ளது. சம்மந்தப்பட்டவர்கள் தம்மை சுயதனிமைப்படுத்தி அடையாளம் காட்டுவதன் ஊடாக தமது உறவினர்களையும் பிரதேசத்தையும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும் என்று சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.