தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும், சர்வதேச பாடசாலைகளும் ஏப்ரல் 5ஆம் திகதி திறக்கப்பட உள்ளன. இதன்படி கொழும்பு மறைமாவட்டத்தில் தரம் 5, 11, மற்றும் 13ஆம் தரம் மட்டுமே திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கத்தோலிக்க பாடசாலைகளின் தலைவர் கெமுனு டயஸ் இதை தெரிவித்துள்ளார்.
- Advertisement -

மேலும் மார்ச் மாதம் 29ஆம் திகதி அனைத்து அரச பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் மார்ச் 29 தனியார் பாடசாலைகள் திறக்கப்படாது எனவும், அனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும், சர்வதேச பாடசாலைகளும் ஏப்ரல் 5ஆம் திகதி திறக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.