இன அல்லது மதங்களின் பெயர்களைக் கொண்ட அரசியல் கட்சிகள் எதிர்காலத்தில் பதிவு செய்யப்படமாட்டாது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் பதிவுசெய்யப்பட்ட இன அல்லது மத பெயர்களுடன் தொடர்புடைய கட்சிகளுடன் கலந்தாலோசித்து அவற்றை திருத்துவதற்கும் ஆணைக்குழு தமது கவனத்தை செலுத்தவுள்ளது .

ஒரு இனம் அல்லது மதத்தின் பெயர்களைக் கொண்ட பல சிறுபான்மை அரசியல் கட்சிகள் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் தேர்தல்களின் நோக்கத்திற்காக ஒரு அரசியல் கட்சி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக கருதப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.