தேய்ந்த டயர்களையுடைய வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அதற்குப் பதிலாக புதிய டயர்களை பொருத்துவதற்கான நிவாரண காலம் சாரதிகளுக்கு வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
- Advertisement -
வியாபார நிலையங்களில் டயர் தட்டுப்பாடு காணப்படுவதனால் அந் தந்த வாகனங்களுக்குப் பொருத்தமான டயர்கள் வியாபார நிலையங் களில் இல்லை என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உட்படப் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ள பலர் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -

தேவையான டயர்கள் வியாபார நிலையங்களுக்கு வந்தடைந்ததன் பின்னர் இந்த சட்டத்தை நடைமுறைப் படுத்துமாறு அகில இலங்கை சாரதி பயிற்சிப் பாடசாலை உரிமையாளர்களின் தேசிய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பயணிகள் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட சாரதி களின் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு இந்த டயர்களை மாற்று வதற்கு நிவாரண காலத்தை வழங்கத் தீர்மானித்துள்ளதாக அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்