இந்து ஆலயமொன்றில் கொவிட் கொத்தணி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹட்டன் – மஸ்கெலிய பகுதியில் அமைந்துள்ள இந்து ஆலயமொன்றிலேயே இந்த கொத்தணி உருவாகியுள்ளதாக மஸ்கெலிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆலயத்தில் 11 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த கோவிலில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் கடந்த தினம் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
- Advertisement -
கோவில் பூசகருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவருடன் நெருங்கிப் பழகிய 35 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இந்த 11 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மஸ்கெலிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.