தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் அனைத்து பேக்கரி பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எண்ணெய் மற்றும் வெண்ணெய்க்கு அதிக வரி விதிக்கப்படுவதால் பேக்கரி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் பேக்கரி தொழிலை நடத்துவதில் உரிமையாளர்கள் பெரும் சிக்கலை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இறக்குமதி கட்டுப்பாடுகள், வரி மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன குறிப்பிட்டார். இதேவேளை மற்றய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன என குறிப்பிட்ட அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன, இது தொடர்பில் எந்த நடவடிக்கையயும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.