சபுகஸ்கந்த துணை மின்நிலையத்தில் அவசர திருத்த பணிகள் காரணமாக கம்பஹா பகுதிக்கு நீர் வழங்கல் நாளை தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் 3 மணி வரை மொத்தமாக 6 மணி நேரம் நீர் வழங்கல் நிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது. அதன்படி, பின்வரும் பகுதிகளுக்கு நீர் வழங்கல் நிறுத்தப்படும்.
- Advertisement -

பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, களனி, பியகம, மகர, டொம்பே மற்றும் சீதுவ பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைசெய்யப்பட உள்ளது.