குருநாகலில் பஸ் தரிப்பிடத்திற்கு அருகே உள்ள ஹோட்டலில் ஊழியர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு வாழைப்பழத்தின் விலை தொடர்பாக இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிவடைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த ஹோட்டலில் வாழைப்பழத்தை சாப்பிட விரும்பிய நபர் பழ சீப்பின் விலையை கேட்டுள்ளார்.

இதன்போது ஹோட்டல் ஊழியர் அவரிடம் ஒரு வாழைப்பழம் ரூ .30 என்று கூறியிருந்தார். இதனால் கோபம் கொண்ட நபர் ஹோட்டல் ஊழியரை உடைந்த போத்தலால் குத்தியுள்ளார். இதில் ஊழியர் உயிரிழந்ததுடன், சந்தேகநபரை குருநாகல் பொbnmydfலிஸார் கைது செய்தனர். மேலும் சம்பவம் நடந்த நேரத்தில் சந்தேக நபர் மது போதையில் இருந்ததாக பொbnmtsலிஸார் தெரிவித்தனர்.