ரஷ்யா, தனது ஸ்பூட்னிக் வி எதிர்ப்பு கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு ஒரு குப்பி 9.95 அமெரிக்க டொலருக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 6.5 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான கட்டளை விரைவில் வழங்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. விநியோக அட்டவணையின் அடிப்படையில் 500,000 குப்பிகள் ரஸ்யாவில் இருந்து தருவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

இதற்கிடையில், சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி இலங்கையில் அவசரகால பயன்பாட்டின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.