மிலேனியம் செலேன்ஞ்ச் கோப்பரேஸன்; கம்பெக்ட் எனப்படும் எம்.சீ.சீ உடன்படிக்கை கைச்சாத்திடப்படாது என சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார். அமெரிக்காவுடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவிருந்தது. எவ்வாறெனினும், இந்த உடன்படிக்கையை கைச்சாத்திடப்பட மாட்டாது என சட்ட மா அதிபர் தப்புலா லிவேரா உச்ச நீதிமன்றிற்கு இன்று அறிவித்துள்ளார்.
- Advertisement -

இலங்கை அரசாங்கம் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் தேர்தல் காலங்களில் உறுதிமொழி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.