பசறையில் விபத்துக்குள்ளாகி 15 பேர் உயிரிழந்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான குறித்த பேருந்தில் கடந்த வாரம் பண்டாரவளை நகரத்தில் பயணித்த சுப்புன் நலிந்த என்பவர் தனது அனுபவத்தை பதிவிட்டுள்ளார். “கடந்த வாரம் திங்கட்கிழமை காலை 9.20 மணியளவில் பண்டாரவளை நகரில் நான் இதே பேருந்தில் ஏறினேன். ஹப்புத்தளை பகுதியில் இதேபோன்ற வளைவு ஒன்றில் பேருந்து திரும்பியது.
- Advertisement -

அப்போதும் பள்ளத்தில் விழுவதற்கு நொடிப் பொழுதில் பேருந்து தப்பியது. பின்னர் பம்பஹின்ன சந்தியில் முன்னால் சென்ற வானை முந்திச் செல்ல இந்த பேருந்து சாரதி முயற்சித்தார். இதனால் எதிரில் வந்த மற்றுமொரு பேருந்தில் இந்த பேருந்து மோதப் பார்த்தது. அப்போதும் அதிஷ்டவசமாக பேருந்து பாரிய விபத்தில் இருந்து தப்பியது. இதன் போது பேருந்தில் இருந்த பெண் ஒருவர் கோபமடைந்து ஏன் இவ்வாறு வாகனம் ஓட்டுகிறீர் என நடத்துனரிடம் கேட்டார்.