சீனாவின் கொரோனா தடுப்பூசியான சினோபார்ம் கொவிட் -19 இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்காக தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கமல் ஜெயசிங்க, தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் நிபுணர் குழுவால் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

டாக்டர் கமல் ஜெயசிங்க மேலும் கூறுகையில், 600,000 டோஸ் சினோபார்ம் தடுப்பூசி எதிர்காலத்தில் நாட்டில் கிடைக்கும். அதன்படி, இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு தற்போது இரண்டு தடுப்பூசிகள் உள்ளன, முன்னர் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி கோவிஷீல்ட் தடுப்பூசி, இது ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இந்திய தயாரிப்பு ஆகும்.