வடக்கு மாகாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள் ளது. யாழ்ப்பாணத்தில் இருவரும் முல்லைத்தீவில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 419 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
- Advertisement -
3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
- Advertisement -

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட சுண்டுக்குளியைச் சேர்ந்த 37 வயதுடைய ஆண் ஒருவருக்கே கொவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையில் கொரோனா அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட பெண் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் ஒருவருடன் தொடர்புடையவர்.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் பெண் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் தொற்றாளர் ஒருவருடன் தொடர்புடையவர்.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.