அம்பாறை பிரசேத்தில் பரசூட் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அம்பாறை உகன விமானப்படை முகாமின் பரசூட் பயிற்சியின் போது இடம்பெற்ற விபத்தின் போதே விமானப்படை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் 34 வயதுடைய இரத்மலானை விமானப்படை முகாமைச் சேர்ந்த விமானப்படைத் தளபதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
8000 அடி உயரத்தில் பரசூட் பயிற்சியில் ஈடுபட்ட போதே பரசூட் வீழ்ந்ததாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு பரசூட்கள் ஒன்றுடன் ஒன்று சிக்கிக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.