சர்வதேச விசாரணையை தவிர்ப்பதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகனை சந்திப்பதற்கு அரசாங்கம் விருப்பம் கொண்டுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்திருந்த நிலையில், வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -

யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் பேசியபோது அவர் இதனைக் கூறினார். இதேவேளை காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையினையும் முன்னெடுக்கப் போவதில்லை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.