வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வடக்கின் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர்,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 304 பேரின் மாதிரிகளும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 427 பேரின் மாதிரிகளும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 9 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
- Advertisement -
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேரும் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஒருவரும் கண்டறியப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட மானிப்பாயைச் சேர்ந்த தாய்க்கும் மகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர நவீன சந்தை வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றும் 21 வயது இளைஞன் ஒருவர் தொற்று அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நிலையில் கோவிட் -19 நோய்த் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.