கொவிட் -19 தொற்றுநோயால் வேலை இழந்த தனியார் துறை ஊழியர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு தொழிலாளர் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறித்த ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்காலத்தில் இவர்களுக்கு வழங்கக்கூடிய எந்தவொரு நிவாரணத்தையும் செயல்படுத்தும் நோக்கத்துடன் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
- Advertisement -

அதன்படி, வேலை இழந்தவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், வேலை செய்யும் இடம், பணிநீக்கம் செய்யப்பட்டதிகதி, சேவையின் காலம் மற்றும் கடைசியாக பெறப்பட்ட அடிப்படை சம்பளம் போன்ற தகவல்களை வழங்க வேண்டும்.
- Advertisement -
தகவல் தொழிலாளர் ஆணையர், தொழில்துறை உறவுகள் பிரிவு, 11 வது மாடி, மெஹுவரா பியாசா, கொழும்பு 05 க்கு எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதிக்கு முன் அனுப்பப்பட வேண்டும். மேலதிக விபரங்களை 011 2368502 என்ற இலக்கத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.