காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தான் வெகு விரைவில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளதாக கடற்தொழில் அமைச்சர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்திய நாட்டின் ஜனாதிபதி விரைவாக வடக்கிலுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை சந்தித்து அவர்களுடைய தேவைப்பாடுகள் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
