வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலரின் விற்பனை விலை 201 ரூபாவாக அதிகரித்துள்ளது. நேற்று 17ம் திகதி மத்திய வங்கி வௌியிட்ட நாணயமாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொரின் இலங்கைபெறுமதி 201.75 சதமாக காணப்பட்டது.அமெரிக்க டொலர் வாங்கும் விலை 197.58 சதமாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் அமெரிக்க டொலர் விற்பனை விலை ஆகக்கூடுதலாக 2020 ஏப்ரல் 9ம் திகதி 200.47 சதமாக இருந்தது.
- Advertisement -

அண்மைய நாட்களின் அமெரிக்க டொலரின் இலங்கை பெறுமதி அடங்கிய ஆவணம் கீழே காணப்படுவதுடன் பாரியளவு இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அமெரிக்க டொலர் விற்பனை பெறுமதி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.