நாட்டில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை எனவும் பண்டிகை காலத்தில் அதன் விலை அதிகரிக்காது எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து அலரிமாளிகையில் இடம்பெற்ற தௌிவூட்டல் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
- Advertisement -

எனினும் உலக சந்தையில் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளதால் 600 ரூபாவால் அதன் விலையை அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் லாப் சிலிண்டருக்கு நாட்டில் தட்டுப்பாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.