இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக் – 21 ரக போர் விமானம் விபத்திற்கு உள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மத்திய விமானப்படைத்தளத்தில் இருந்து மிக் – 21 பைசன் போர் விமானம் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.
- Advertisement -

விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.