இலங்கையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள எவருக்கும் இரத்த உறைவுகள் ஏற்படவில்லை என்பதால் எவரும் அச்சப்படத்தேவை இல்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்தார். அத்துடன், சீனாவில் தயாரிக்கப்படும் சைனோபாம் தடுப்பூசிக்கு அனுமதியளிப்பதற்கான தகவல்கள் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபைக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 06 இலட்சம் தடுப்பூசிகள் முதல் கட்டமாக இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.