கொரோனா தொற்றை அடுத்து முகக்கவசம் அணியும் செயற்பாட்டால் சுவாசம் சார்ந்த நோய்கள் பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ஜாஎல ஓபாத்த பிரதேசத்தில் முகக்கவச உற்பத்தி நிலையம் ஒன்றைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த உற்பத்தி நிலையத்தில் என்-95 மற்றும் சத்திர சிகிச்சை முகக் கவசங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இலங்கைக்குத் தேவையான முகக்கவசங்களை இங்கு உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு உள்ளதுடன், மேலதிக உற்பத்திகளை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பும் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்