தலைமன்னார் பகுதியில் நேற்று மதியம் புகையிரதம் தனியார் பேருந்து மீது மோதி ஏற்பட்ட விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் 24 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த விபத்து தொடர்பாக தலைமன்னார் பொலிஸார் இன்றைய தினம் புதன் கிழமை புகையிரத கடவையின் பாதுகாப்பு ஊழியர் மற்றும் விபத்துக்குள்ளான தனியார் பேருந்து சாரதியையும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர். இதன் போது புகையிரத கடவை பாதுகாப்பு ஊழியர் மற்றும் பேருந்து சாரதியையும் இம்மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு மன்னார் நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.