182 மையப்பெட்டிகள் மட்டுமே புதைக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் நசீர் சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – கோறளைப்பற்று – மேற்கு ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே அவர் மேற்கண்ட சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
- Advertisement -

“மையப்பெட்டிகள் அடக்கம் செய்யப்பட்டன. அவ்வளவுதான் சொல்ல முடியும். 182 மையப்பெட்டிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் நான் நிறுத்திக் கொள்கிறேன். இது குறித்த உத்தியோகபூர்வ தகவல் உள்ளது. மறைக்கப்பட்ட தகவலும் உள்ளது. இந்த அனைத்திற்கும் அரசாங்கம் உதவி செய்தது. அவர்களின் பிரச்சினையை நாம் தெரிந்து வைத்துள்ளோம். எமது பிரச்சினையை அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர். அவசரமாக 39 சடலங்களை எப்படி கொண்டு வந்தார்கள் என நீங்கள் நினைக்க வேண்டாம். அது சரியில்லை. இதற்குத்தான் நாம் வேலை செய்தோம்” என்று மொஹமட் நசீர் தெரிவித்தார்.