பொதுமக்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொவிட் தடுப்பூசியை ஏற்க மறுத்துள்ளனர். ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாயணக்கார, ஹேஷா விதானகே மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரே தடுப்பூசியை ஏற்ற மறுத்துள்ளனர்.
- Advertisement -

எனினும் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் மயந்த திஸநாயக்க இருவரும் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று காலை முதல் இராணுவ வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.