அமெரிக்கா நாட்டில் 5 வயது சிறுமி ஒருவர் தனது அம்மாவின் கைபேசியை எடுத்து அமேசானில் கிட்டத்தட்ட 10 இலட்சம் ரூபாய்க்கு வெறும் விளையாட்டுப் பொருட்களை ஓடர் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்நாட்டின் மசாசூசெட்ஸைச் சேர்ந்த 5 வயது சிறுமியான லீலா வாரிஸ்கோ (Lila Varisco) இந்த ஓடரை செய்யும்போது தனது அம்மாவுடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
- Advertisement -
அம்மாவின் தொலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, 10 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஜீப் மற்றும் 10 ஜோடி cowgirl பூட்ஸை ஓர்டர் செய்ய “Buy Now” என்பதைக் கிளிக் செய்தார்.
அவரது தாயார் ஜெசிகா நூன்ஸ், தனது அமேசான் அப்பை பார்த்த பின்னர் அந்தப் பொருட்களை வாங்கியதைக் கண்டுபிடித்ததாகக் கூறினார். பைக்குகள் மற்றும் ஜீப் மட்டும் சுமார் 10 இலட்சத்திற்கு வந்தது. பூட்ஸ் மட்டும் சுமார் 2 இலட்சம் ரூபாய்க்கு இருந்தது. இதன்போது அதிர்ஷ்டவசமாக, நூன்ஸ் சில ஆர்டர்களை கான்சல் செய்தார். இருப்பினும், 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு குழந்தைகள் ஜீப்பின் ஓர்டரை கான்சல் செய்வதற்கு தாமதமாகிவிட்டது.
குழந்தையின் மோட்டார் சைக்கிள்கள் nonreturnable ஓர்டர் ஆகும், அதாவது ஒருமுறை வாங்கினால் திரும்பப் பெற மாட்டாது. வேறு வழியில்லாமல் தன் மகளின் தவறைச் சமாளிக்கதான் வேண்டும் என பெற்றுக்கொண்டுள்ளார்