கடந்த 9 நாட்களாக உக்ரைனில் கடுமையான தாக்குதலை நடத்தி வந்த ரஷியா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 10-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இருதரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக, உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலால், அந்நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் பலர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. கடும் சவால்களை கடந்து அண்டை நாடுகளுக்கு உக்ரைனில் இருந்து பலர் நடந்தே செல்லும் நிலையும் ஏற்பட்டது.
- Advertisement -
இந்த நிலையில், மீட்பு பணிக்காக உக்ரைன் 2 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது. உக்ரைனுடனான 2-வது கட்ட பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட படிவோல்னோவாகா, மரியுபோல் ஆகிய 2 நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷியா தெரிவித்துள்ளது. இரு நகரங்களில் இருந்தும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற இந்த நடவடிக்கையை ரஷியா எடுத்துள்ளது.